சாலையோர வியாபாரிகளால் போக்குவரத்துக்கு இடையூறு

சாலையோர வியாபாரிகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.;

Update:2022-05-29 23:36 IST

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சங்குபேட்டை செல்லும் சாலையின் இருபுறங்களிலும் சாலையோர வியாபாரிகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. பாதசாரிகள் நடந்து செல்லும் சாலையில் கடை வைத்து வியாபாரிகள் வியாபாரம் செய்கின்றனர். மேலும் சாலையோரத்தில் சரக்கு வாகனத்தை நிறுத்தி, அதன் மூலம் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்