பொறியியல் பணி: சில ரெயில்கள் ரத்து; பல ரெயில்கள் வழித்தடம் மாற்றம்

ஈரோடு- திருச்சி பாசஞ்சர் ரெயில் 27-ம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.;

Update:2026-01-21 19:55 IST

சென்னை,

திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

திருச்சி ரெயில்வே கோட்டத்தில் பல இடங்களில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வருகிற 27-ந்தேதி கரூர்- திருச்சி பாசஞ்சர் ரெயில், திருச்சி- கரூர் பாசஞ்சர் ரெயில், திருச்சி -ஈரோடு பாசஞ்சர் ரெயில் மற்றும் சேலம்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில், ஈரோடு- திருச்சி பாசஞ்சர் ரெயில் ஆகிய ரெயில்கள் அன்றைய தினம் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.

திருச்சியில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்பட்டு செல்லும் திருச்சி காரைக்கால் டெமு ரெயில் வருகிற 22, 24, 27, மற்றும் 29 ஆகிய தேதிகளில் திருச்சி- தஞ்சாவூர் இடையே மட்டும் இயக்கப்படும். ஈரோடு -திருச்சி பாசஞ்சர் ரெயில் வருகிற 27-ந்தேதி ஈரோடு- கரூர் இடையே மட்டுமே இயக்கப்படும்.

பாலக்காடு- திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 27-ந்தேதி பாலக்காடு- கரூர் இடையே மட்டுமே இயக்கப்படும். காரைக்கால்- திருச்சி பாசஞ்சர் ரெயில் வருகிற 22, 24, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காரைக்கால்- தஞ்சாவூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதால் தஞ்சாவூரில் இருந்து மாலை 5.32 மணிக்கு புறப்படும். திருச்சி -பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 27-ந்தேதி திருச்சி -கரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதால் அன்றைய தினம் கரூரில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும்.

மதுரை ரெயில்வே கோட்டத்தில் பல இடங்களில் பொறியியல் பணிகள் நடப்பதால் செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 22, 23, 24, 25, 27, 29, 30, 31 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி திருச்சி வழியாக இயக்கப்படும். இதே போல் நாகர் கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 22, 25 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும், கன்னியாகுமரி- ஹவுரா அதிவிரைவு ரெயில் வருகிற 24 மற்றும் 31 ஆகிய தேதிகளிலும், குருவாயூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 21, 22, 23, 24, 28, 29, மற்றும் 30 ஆகிய தேதிகளிலும் இதே வழித்தடத்தில் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்