கண்மாயில் மூழ்கி முதியவர் பலி

விளாத்திகுளத்தில் கண்மாயில் மூழ்கி முதியவர் பலியானார்;

Update:2022-07-13 21:40 IST

எட்டயபுரம்:

விளாத்திகுளம் பத்ரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காசிமணிவயது (வயது 75). இவர் நேற்று மதியம் ஒரு மணி அளவில் குளிப்பதற்கு கத்தாளம்பட்டி செல்லும் சாலையில் உள்ள கண்மாய்க்கு சென்றுள்ளார். அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று தடுமாறி உள்ளே ஆழமான பகுதயில் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்