நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
படுக இன மக்கள் ஆண்டுதோறும் ஹைத்தையம்மன் திருவிழா கொண்டாடுகின்றனர்.;
நீலகிரி மாவட்டத்தில் படுக இன மக்கள் ஆண்டுதோறும் ஹைத்தையம்மன் திருவிழா கொண்டாடுகின்றனர். மாவட்டத்தின் முக்கிய 4 சீமைகளில் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஹைத்தையம்மன் திருவிழாவில் படுக இன மக்கள் பங்கேற்று அம்மனை வழிபாடுகின்றனர்.
கோத்தகிரி பேரகணியில் நாளை ஹைத்தையம்மன் திருவிழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாளைய விடுமுறையை ஈடுசெய்ய வரும் 24ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.