கடலூரில் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூரில் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.;

Update:2022-05-24 23:04 IST

கடலூர்,

வங்கி தேர்வில் தமிழக இளைஞா்களின் வேலை வாய்ப்பை பாதிக்கும் மத்திய அரசின் சதியை கண்டித்து கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தை தி.க. பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் தொடங்கி வைத்தார். மண்டல இளைஞரணி செயலாளர் பஞ்சமூர்த்தி தலைமை தாங்கினார். மாணவர் கழக மண்டல செயலாளர் பண்பாளன், இளைஞரணி தலைவர் உதயசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், வங்கி தேர்வுகளில் இனி தமிழுக்கு இடமில்லை என்ற நிலையை உருவாக்கிய மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மண்டல செயலாளர் தாமோதரன், மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட அமைப்பாளர் மணிவேல், நிர்வாகிகள் தமிழன்பன், பெரியார் செல்வன், நகர தலைவர் எழிலேந்தி, இளைஞரணி அமைப்பாளர் ராமநாதன், மாணிக்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் சின்னதுரை நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்