திண்டிவனம் அருகே வாகனம் மோதி மூதாட்டி சாவு
திண்டிவனம் அருகே வாகனம் மோதி மூதாட்டி உயிாிழந்தாா்.;
திண்டிவனம்,
திண்டிவனம் அடுத்த சாரம் கிராமம், ஈச்சேரி ரோடு பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி முனியம்மாள்(வயது 65). இவர் நேற்று காலை சாரம் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்று, முனியம்மாள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.