பள்ளி செல்லா மாணவர்கள் கணக்கெடுக்கும் பணி
சூளகிரி பகுதியில் பள்ளி செல்லா மாணவர்கள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.;
சூளகிரி
சூளகிரி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி சூளகிரி அருகே காளிங்கவரம், சிம்பல்திராடி, பஸ்தலப்பள்ளி பகுதிகளில் தலைமையாசிரியர்கள் சண்முகம், ராஜேந்திரன், ஆசிரியர் பயிற்றுனர் வைத்தியநாதன் மற்றும் ஆசிரியர்கள் கிராமம், கிராமமாக சென்று மாணவரின் தற்போது நிலை குறித்து மொபைல் ஆப்பில் பதிவு கணக்கெடுத்து வருகின்றனர். இது குறித்து தலைமையாசிரியர் சண்முகம் கூறுகையில், கொரோனா காலத்தில் கல்வியை தொடர முடியாத மாணவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் தங்கள் பகுதியில் பள்ளி செல்லா, இடைநின்ற மாணவர்கள் இருப்பின் பொதுமக்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அவர்களை பள்ளியில் சேர்க்க அணுகலாம் என்று கூறினார்.