முன்னாள் ரெயில்வே அதிகாரி வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு

ஸ்ரீரங்கத்தில் முன்னாள் ரெயில்வே அதிகாரி வீட்டில் 20 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2023-07-25 00:40 IST

ஸ்ரீரங்கத்தில் முன்னாள் ரெயில்வே அதிகாரி வீட்டில் 20 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

முன்னாள் ரெயில்வேஅதிகாரி

திருச்சி ஸ்ரீரங்கம், வடக்கு சித்திரை வீதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 80). முன்னாள் ரெயில்வே அதிகாரி. இவரது மனைவி சவுந்தரவல்லி. இந்த தம்பதிக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

இதில் ஒரு மகனும், ஒரு மகளும் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகின்றனர். மற்றொரு மகனும், மகளும் பெங்களூருவில் பணியாற்றி வருகின்றனர். இதனால் தம்பதி மட்டும் ஸ்ரீரங்கத்தில் உள்ள பூர்வீக வீட்டில் வசித்து வருகின்றனர்.

20 பவுன் நகைகள் திருட்டு

இதனிடையே கடந்த 1½ மாதத்துக்கு முன்பு சீனிவாசனும், சவுந்தரவல்லியும் வீட்டை பூட்டிவிட்டு பெங்களூருவில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சீனிவாசனின் வீ்ட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று பார்வையிட்டனர். அப்போது, பீரோவும் திறந்து கிடந்தது. இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து பெங்களூருவில் உள்ள சீனிவாசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் வீட்டில் இருந்த 20 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்