பாலை தரையில் கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம்
பாலை தரையில் கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
சரவணம்பட்டி
கோவை எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம் கீரணத்தம் ஊராட் சியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் கீரணத்தம் ஊராட்சி பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற் பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
அவர்கள் உற்பத்தி செய்யும் பாலை கூட்டுறவு சங்கத்தில் கொள்முதல் செய்கின்றனர்.
ஆவின் நிறுவனத்தில் பாலை ரூ.28 முதல் ரூ.33 வரை கொள்மு தல் செய்கிறார்கள். ஆனால் பால் உற்பத்தி ஆவதற்கு ரூ.38 முதல் ரூ.44 வரை செலவாகிறது. எனவே பால் கொள்முதல் விலை தங்களுக்கு போதுமானதாக இல்லை, பால் கொள்முதல் விலை யை தமிழ்நாடு அரசு உயர்த்தி தரவேண்டும் என்று கீரணத்தம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் பட்ஜெட்டில் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசின் எந்த ஒரு அறிவிப்பும் செய்ய வில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் நேற்று பாலை சங்கத்தில் கொடுக்காமல் சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, மாடுகளை பராமரிக்க ஆள்கூலி, தீவனம், மருத்துவ செலவு ஆகியவை கடுமை யாக உயர்ந்து உள்ளது. ஆனால் கூட்டுறவு சங்கங்களில் கொடுக் கும் பாலுக்கான கொள்முதல் விலை கட்டுப்படியாக வில்லை. எனவே பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என்றனர்.