தீத்தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி
சின்னசேலம் அருகே தீத்தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.;
சின்னசேலம்,
சின்னசேலம் தீயணைப்பு நிலையம் சார்பில் ராயப்பனூரில் தவிட்டிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் தனியார் ஆலை, அம்மையகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு நிலைய அலுவலர் பரமசிவம் தலைமை தாங்கினார். இதில் தீ விபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு அணைப்பது, தீத்தடுப்பு கருவிகளை பயன்படுத்தும் முறை குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர். இதில் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.