வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி முதியவரிடம் ரூ.1½ லட்சம் மோசடி

நண்பரின் அவசர மருத்துவ சிகிச்சைக்கு பணம் அனுப்புமாறு கூறி வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி முதியவரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்யப்பட்டது.;

Update:2023-08-26 00:45 IST


கோவை


நண்பரின் அவசர மருத்துவ சிகிச்சைக்கு பணம் அனுப்புமாறு கூறி வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி முதியவரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்யப்பட்டது.


சைபர் கிரைம் மோசடி


சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:- தங்களின் நண்பர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், மருத்துவ சிகிச்சை செலவுக்கு அவசர மாக பணம் தேவை என்றும் கூறி நம்ப வைத்து பணமோசடி செய்வது தற்போது அதிகரித்து வருகிறது.


ரூ.1½ லட்சம் அனுப்பினார்


அந்த வகையில் கோவையை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவ ரின் நண்பர் லண்டனில் உள்ளார். அவரின் புகைப்படத்தை செல்போனில் முகப்பு படமாக (டி.பி.) வைத்த எண்ணில் இருந்து முதியவருக்கு இரவு 10 மணிஅளவில் குறுஞ்செய்தி வந்தது.அதில், உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். உடனே ரூ.1½ லட்சம் அனுப்பி வைத்தால், ஆஸ்பத்திரி யில் இருந்து வெளியே வந்ததும் பணத்தை தந்து விடுவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.


அதை பார்த்த முதியவர், உடனே தனது நண்பரின் செல்போ னுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவர் செல்போனை எடுக்க வில்லை. இதனால் அவர், தனக்கு குறுஞ்செய்தி வந்த செல்போன் வாட்ஸ்அப்பில் தனது நண்பரின் முகப்புபடம் (டி.பி.) இருந்ததால் அதை நம்பி அந்த எண்ணுக்கு ரூ.1½ லட்சத்தை அனுப்பி உள்ளார்.


100 புகார்கள்


மறுநாள் அவரது நண்பரிடம் பேசிய போது தான் தன்னிடம் யாரோ பணத்தை மோசடி செய்தது தெரிய வந்தது. இது குறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.


இதுபோன்று கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 6 மாதங்களில் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்து உள்ளன.


எனவே நண்பரின் மருத்துவ சிகிச்சை பணம் தேவை என்று குறுஞ்செய்தி வந்தால் உடனே சம்மந்தப்பட்ட நபரிடம் ேபசி உறுதி செய்து கொண்டே பிறகு பணம் அனுப்ப வேண்டும். அறிமுகம் இல்லாத நபர் மற்றும் தெரியாத எண்ணில் இருந்து வரும் தகவல்களை நம்பி ஏமாறாமல் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.


மேலும் செய்திகள்