ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச சீருடை

ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச சீருடைகளை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வழங்கினார்.;

Update:2023-01-04 01:14 IST

சேரன்மாதேவி:

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபாலசமுத்திரம் முதல் பாபநாசம் வரை உள்ள ஆட்டோ டிரைவர்களுக்கு இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில், இலவச சீருடை வழங்கினார்.

இதில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, மாநில பேச்சாளர் மீனாட்சி சுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் அம்பை விஜயபாலாஜி, சேரன்மாதேவி மாரிச்செல்வம், நகரச் செயலாளர்கள் விக்கிரமசிங்கபுரம் கண்ணன், அம்பை அறிவழகன், பேரூர் செயலாளர்கள் முருகன், பழனி குமார், முருகேசன், அம்பை ஒன்றிய துணைச் செயலாளர் பிராங்கிளின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்