மர்ம காய்ச்சலுக்கு பெண் குழந்தை பலி-சேலத்தில் பரபரப்பு

மர்ம காய்ச்சலுக்கு பெண் குழந்தை பலியானதால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;

Update:2023-07-28 01:33 IST

அன்னதானப்பட்டி:

கூலி தொழிலாளி

சேலம் மூணாங்கரடு திருவள்ளுவர்நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன், கூலித்தொழிலாளி.

இவருடைய மனைவி சண்முகபிரியா. இவர்களுடைய மகள் லத்திகா (வயது 3). சிறுமிக்கு காய்ச்சல் வந்து உடல் சோர்வடைந்து மயங்கி விழுந்தாள்.

போலீஸ் விசாரணை

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அந்த குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மர்ம காய்ச்சலுக்கு சிறுமி இறந்தது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்