அரசின் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும்

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதிஸ்டாலின் அரசின் திட்டங்களை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Update: 2023-04-04 18:45 GMT


திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதிஸ்டாலின் அரசின் திட்டங்களை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அரசின் திட்டங்கள்குறித்து ஆய்வு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசின் திட்டங்களின் செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, செல்வராஜ் எம்.பி., தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகத்தலைவர் மதிவாணன், எம்.எல்.ஏ.க்கள் பூண்டி கலைவாணன், டி.ஆர்.பி. ராஜா, மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆய்வுக் கூட்டத்தில் முதல்-அமைச்சரின் திட்டங்களான வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், இ-வாடகை குறித்தும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II, சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு, தீனதயாள் உபாத்யா கிராமின் கவுசல்யா திட்டம், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு..

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், நமக்கு நாமே திட்டம், ஜீவன் மிஷன் திட்டம் குறித்தும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசின் இ-சேவை மையம், பள்ளிக்கல்வித்துறையின் எண்ணும் எழுத்தும் இயக்கம், பள்ளி உட்கட்டமைப்பு, அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், சிறப்பு திட்ட செயலாக்கங்களான நான் முதல்வன் திட்டம், முதல்வரின் சிறப்பு திட்டாக்க பணிகள் செயல்பாடு குறித்தும் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள், அங்கன்வாடிகள், புதுமைப்பெண் திட்டம் குறித்தும், மக்களை தேடி மருத்துவம் குறித்தும், முதல்வரின் முகவரி திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் முன்னேற்றம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் நடந்துவரும் திட்டப் பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமை மற்றும் திட்ட இயக்குனர் சந்திரா, வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கீதா, கீர்த்தனா மணி, மகளிர் திட்ட இயக்குனர் வடிவேல் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்