பொது வினியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம்

பொது வினியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நடந்தது.;

Update:2022-06-11 20:46 IST

வாய்மேடு:-

நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் வாட்டாகுடி ஊராட்சியில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் நீலமேகம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வீரமணி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார் ரேஷன் அட்டையில் பெயர் நீக்குதல் பெயர் சேர்த்தல் உள்ளிட்டவை தொடர்பான மனுக்களை பெற்றார். இதில் பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்