தேசிய கொடியை ஏற்றி கலெக்டர் மரியாதை

கோவை வ.உ.சி. மைதானத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் 112 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம் வழங்கப்பட்டது.;

Update:2023-01-27 00:15 IST

கோவை

கோவை வ.உ.சி. மைதானத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் 112 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம் வழங்கப்பட்டது.

குடியரசு தினவிழா

நாடு முழுவதும் நேற்று 74-வது குடியரசு தினவிழா கோலாகல மாக கொண்டாடப்பட்டது. கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவை வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தினவிழா நடந்தது.

இதில் கலெக்டர் சமீரன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். வெள்ளை நிற புறாக்களையும் அவர் பறக்கவிட்டார்.

அதைத்தொடர்ந்து அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாைத யை ஏற்றுக்கொண்டார். பிறகு அவர் சுதந்திர போராட்ட தியாகி களின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் அவர், தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

முதல்- அமைச்சர் பதக்கம்

இதையடுத்து காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம் வழங்கப்பட்டது. இதில் கோவை மாநகர காவல்துறையை சேர்ந்த 69 போலீசார், மாவட்ட காவல்துறையை சேர்ந்த 43 போலீசார் என்று மொத்தம் 112 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கத்தை கலெக்டர் சமீரன் வழங்கினார்.

அதுபோன்று சிறப்பாக பணியாற்றிய காவல்துறை பணியாளர் கள் 127 பேருக்கும், டாக்டர்கள், அரசு அதிகாரிகள், பணியாளர் கள் உள்பட 263 பேருக்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி னார். அதன்பிறகு பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

லைநிகழ்ச்சிகள்

கோவை ஷாஜகான் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் செவ்வியல் நடனம், பல்வகை வாத்திய கருவி வாசிப்பு நிகழ்ச்சி, வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளின் ஒயிலாட்டம், அசோகபுரம் அரசு பள்ளி மாணவர்களின் நாட்டுப்புற நடனம், கல்வீரம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டுப்புற நடனம் மற்றும் ஆழியாறு அரசு பள்ளி மாணவர்களின் பறை நடனம் ஆகியவை நடைபெற்றது.

இந்த கலை நிகழ்ச்சிகளை அரசு அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் பார்த்து ரசித்தனர். கலைநிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திய பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

அரசு அதிகாரிகள்

விழாவில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. விஜயகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ், உதவி கலெக்டர் (பயிற்சி) சவுமியா ஆனந்த், மாநகர துணை கமிஷனர்கள் சந்தீஷ், மதிவாணன், சுகாசினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோகிலா, கோவை தெற்கு ஆர்.டி.ஓ. பண்டரிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்