ஓட்டல் மேலாளர் விஷம் குடித்து தற்கொலை
பள்ளிபாளையம் அருகே ஓட்டல் மேலாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
பள்ளிபாளையம்
ஓட்டல் மேலாளர்
சேலம் மாவட்டம் வைகுந்தம் பகுதியை சேர்ந்த செல்லமுத்து மகன் பூபதி (வயது 28). இவர் பள்ளிபாளையம் அருகே வெப்படை பச்சாம்பாளையத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு பூபதி ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வயிற்று வலி என்று கூறிவிட்டு தனது அறைக்கு சென்று படுத்துவிட்டார்.
பின்னர் அவர் வாந்தி எடுத்தார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தான் விஷம் குடித்துவிட்டதாக டாக்டர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் பூபதியை மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விசாரணை
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பூபதி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வெப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி வழக்குப்பதிவு செய்து பூபதி எதற்காக விஷம் குடித்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.