கோபியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
கோபியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.;
கடத்தூர்
கோபியில் உள்ள கோர்ட்டு வளாகத்துக்கு முன்பாக நேற்று வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோபி வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் வக்கீல் காளத்திநாதன் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். தமிழகத்தில் உள்ள கோர்ட்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இ-பைலிங் முறையில் உள்ள சிக்கலை நீக்கக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 30-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.