தேசிய பேரிடர் மீட்புப்படை மையத்தில் சுதந்திர தின விழா

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படை மையத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.;

Update:2023-08-16 01:12 IST

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை மையத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கமாண்டன்ட் அகிலேஷ் குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் பேரிடர் காலங்களில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார். பின்னர், வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. விழாவில் பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்