ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம்

ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்றது.;

Update:2023-03-06 00:15 IST

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்றது.

இதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அருளானந்தம் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செந்தில் குமார் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில தலைவர் வீரமணி பேசும் போது, தேர்தல் வரும்போது புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்படுகிறது.

ஆனால் தேர்தல் முடிந்ததும் அந்த வாக்குறுதிகளை மறந்து விடுகின்றனர். எனவே புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்றார்.

போராட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் அரசு, சம்பத்குமார், ஜெகநாதன், ஆனந்த், பாலசுப்பிரமணியன், கலைவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்