ஜல்லிக்கட்டு வதந்தி - தவறான தகவலை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் -டிஜிபி எச்சரிக்கை

தவறான தகவலை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.;

Update:2023-02-02 18:39 IST

சென்னை,

ஜல்லிக்கட்டு, கம்பாலா, எருது விடுதல் போன்ற விளையாட்டுகளுக்கு எந்த விதமான தடையும் விதிக்கவில்லை என டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார்.

சமூகவலைதளத்தில் பரவும் தகவல் தவறானது எனவும் , எந்த விதமான விளையாட்டுகளுக்கும் தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பப்படவில்லை என்றும் இதுபோன்ற தவறான தகவலை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்