சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடந்தது.;
சமயபுரம்:
பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் பவுர்ணமி தினத்தன்று 108 குத்துவிளக்கு பூஜை நடத்தப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து, கடந்த மாதம் பவுர்ணமி அன்று இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து நேற்று அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் 108 பெண்கள் கலந்து கொண்டனர். உற்சவர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மேலும் பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு பித்தளை காமாட்சி அம்மன் விளக்கு, தாலிக்கயிறு, கண்ணாடி வளையல், விளக்குத்திரி, தையல் இலை உள்ளிட்ட பூஜை பொருட்கள், புடவை உள்பட 22 வகையான பொருட்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி, மணியக்காரர் பழனிவேல் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.