ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்திய தொழிலாளி கொலை
ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தியதால் தலையில் கல்லைப்போட்டு தொழிலாளியை கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.;
துடியலூர்
ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தியதால் தலையில் கல்லைப்போட்டு தொழிலாளியை கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.
இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
குப்பை சேகரிக்கும் தொழில்
கேரளாவை சேர்ந்தவர் முகமது பாசில் (வயது28). இவர் தனது மனைவியுடன் துடியலூர் போலீஸ் நிலையம் அருகே நடை மேடையில் தங்கி வாழ்க்கை நடத்தி வந்தார். மேலும் அவர் தனது மனைவியுடன் சேர்ந்து பாட்டில் மற்றும் குப்பை சேகரிக்கும் தொழில் செய்து வந்தார்.
அதே நடைமேடை பகுதியில் கேரளாவை சேர்ந்த ரமேஷ் (51) என்பவரும் தங்கி இருந்தார். அவர்கள் 2 பேரும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நண்பர்களாக பழகி வந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரும் ஒன்றாக வேலை செய்ய தொடங்கினர்.
ஓரின சேர்க்கை
இதனால் வேலை முடிந்ததும் அவர்கள் 2 பேரும் சேர்ந்து மது குடித்து வந்தனர். மேலும் அவர்கள் 2 பேரும் ஓரின சேர்க்கையி லும் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்றுமுன் தினம் அவர்கள் 2 பேரும் சேர்ந்து மதுகுடித்தனர். அப்போது முகமது பாசில், ரமேசை ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக தெரிகிறது. அதற்கு ரமேஷ் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
ஆனாலும் அவரை, முகமதுபாசில் தொடர்ந்து வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு முகமதுபாசில் படுத்து தூங்கி விட்டார்.
தலையில் கல்லை போட்டு கொலை
ஆனால் அவர் மேல் ஆத்திரத்தில் இருந்த ரமேஷ், சாலையோ ரம் கிடந்த கல்லை எடுத்து முகமதுபாசிலின் தலையில் போட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த தகவலின் பேரில் துடியலூர் போலீசார் விரைந்து சென்று முகமது பாசிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கைது
விசாரணையில், ஓரின சேர்க்கைக்கு அழைத்ததால் ஆத்திரம் அடைந்த ரமேஷ், முகமது பாசிலின் தலையில் கல்லைப்போட்டு கொன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ரமேசை தேடி வந்தனர். ஆனால் ரமேஷ் துடியலூர் போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்திய தொழிலாளியின் தலையில் கல்லைப் போட்டு நண்பர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.