கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமிபாண்டியன் கோவை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் ரோந்து சென்றார். அப்போது அங்குள்ள சினிமா தியேட்டர் அருகே நின்ற ஒருவரை பிடித்து விசாரணை செய்தார். அதில் அவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செட்டியார் வீதியை சேர்ந்த பழனிக்குமார்(வயது 56) என்பதும், மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.