ஊட்டி
நீலகிரி மாவட்டம் மலைச்சாரல் தமிழ் சங்கம், கோவை ஐந்திணை தமிழ் சங்கம் சார்பில் ஊட்டியில் கவியரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்தவர்களை தலைவர் பெள்ளி வரவேற்றார். கோவை கவிஞர்கள் வெளியிட்ட புத்தகங்கள், இந்த மலைச்சாரல் கவியரங்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து மன்ற செயல்பாடுகள் குறித்து செயலர் பிரபு பேசினார். பின்னர் பல்வேறு தலைப்புகளில் கோவை, நீலகிரி கவிஞர்கள் கவிதை எழுதி பாடினர். இதில் புலவர் நாகராஜ், சுந்தர பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.