மனைவியை கத்தியால் குத்தியவருக்கு வலைவீச்சு
மனைவியை கத்தியால் குத்தியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்தவர் சத்யா (வயது 32). இவருடைய கணவர் கார்த்திக் பிரபு. இவர்கள் இருவரும் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இந்தநிலையில் தனக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என சத்யா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி கார்த்திக் பிரபு ஜீவனாம்சம் கொடுக்கும் படி கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கிடையே சத்யா வீட்டில் இருக்கும்போது அங்கு வந்த கார்த்திக் பிரபு கத்தியால் அவரை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் படுகாயம் அடைந்த சத்யா ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சத்யா கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் பிரபுவை தேடி வருகின்றனர்.