பால்குட ஊர்வலம்

தியாகதுருகத்தில் பால்குட ஊர்வலம்

Update: 2023-07-04 18:45 GMT

தியாகதுருகம்

தியாகதுருகம் காந்திநகர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை மற்றும் வீதி உலா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள குளக்கரையில் சக்தி அழிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மேளதாள இசையுடன் சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக புறப்பட்டனர். குளக்கரையிலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்