கோர்ட்டு பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

Update:2023-03-24 00:15 IST

கோர்ட்டு பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வக்கீல்கள் கூறினார்கள்.

ஆசிட் வீச்சு

கோவை கோர்ட்டு வளாகத்தில் தன்னுடன் குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி மீது சிவக்குமார் என்பவர் ஆசிட் வீசினார். கோர்ட்டு வளாகத்துக்குள் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை கோர்ட்டு வளாகத்தில் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, கூடுதல் அமர்வு நீதிமன்றங்கள், மாவட்ட முதன்மை கோர்ட்டு மகளிர், போக்சோ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உள்பட 40-க்கும் மேற்பட்ட கோர்ட்டுகள் உள்ளன.

தினமும் 3 ஆயிரம் பேர்

இந்த கோர்ட்டுகளுக்கு விசாரணை, குற்றம் சாட்டப்பட்ட நபர்களை பார்க்க வரும் நண்பர்கள், உறவினர்கள் என்று தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் கோர்ட்டு வளாகத்தில் பாதுகாப்பு குறைவாக இருப்பதா கவும், அதனால் தான் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறு கிறது. எனவே பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்ற வக்கீல்கள் கூறினர்.

இது தொடர்பாக கோவை வக்கீல்கள் கூறியதாவது:-

கோவை கோர்ட்டுக்கு 6 வாசல்கள் உள்ளன. தினசரி வக்கீல்கள் மட்டும் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் வருகிறார்கள். கடந்த மாதம் கோர்ட்டு அருகே கோகுல் என்பவர் வெட்டி கொலை செய்யப் பட்டார். உடனே 6 வாசல்களிலும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் கோர்ட்டுக்குள் வரும் யாரையும் சோதனை செய்வது இல்லை.

பாதுகாப்பில் கூடுதல் கவனம்

எனவே இனியாவது கோர்ட்டுக்கு வருபவர்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வக்கீல்களை தவிர கோர்ட்டுக்கு வரும் பொதுமக்கள் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்தி அதன்பிறகே உள்ளே அனுமதிக்க வேண்டும்.

கைதிகளை போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து வந்து ஆஜர்ப டுத்தி காவல் நீட்டிப்பு வழங்கும் நடைமுறை உள்ளது. இதனால் கைதிகள் மற்றும் அவர்களை பார்க்க உறவினர்கள் வருவதால் கோர்ட்டில் கூட்டம் அதிகரிக்கிறது. இதனால் பாதுகாப்பு குளறுபடி ஏற்படுகிறது. இதை தவிர்க்க காணொலி காட்சி மூலம் கைதிகளை ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலை நீட்டிப்பு செய்யலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்