கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய நகராட்சி ஊழியர்கள்
கோரிக்கை அட்டை அணிந்து நகராட்சி ஊழியர்கள் பணியாற்றினர்.;
புதுக்கோட்டை நகராட்சி பணியாளர்கள் மாநில ஒருங்கிணைப்பு குழு தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை அட்டையை அணிந்து அலுவலகத்தில் பணிபுரிந்து போராட்டம் நடத்தினர். அரசு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிடவேண்டும், பணிமாறுதல்கள் கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும், அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் படுத்த வேண்டும், எல்லை விரிவாக்க பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சியில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கோரிக்கை அட்டையை அணிந்து பணிபுரிந்தனர்.