மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை பலி

திருமணமான 7 மாதத்தில் புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இது தொடர்பாக என்ஜினீயர் உள்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.;

Update:2022-11-27 00:15 IST

கோவை

திருமணமான 7 மாதத்தில் புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இது தொடர்பாக என்ஜினீயர் உள்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கட்டிட தொழிலாளி

திண்டுக்கல் மாவட்டம் திம்மண்ணநல்லூரை சேர்ந்தவர் சிவமணி முத்து (வயது 26). கட்டிட தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த துர்காதேவி (19) என்பவரும் காதலித்து கடந்த 7 மாதங்க ளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கோவை சோமனூர் சாமளாபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினர்.

சிவமணிமுத்து நேற்று முன்தினம் சின்னியம்பாளையம் தங்கம்மன் நகரில் கண்ணன் என்பவரின் வீட்டின் மாடியில் புதிதாக அமைக்கும் கட்டிடத்தில் சென்ட்ரிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப் போது அவர், நீளமான இரும்பு கம்பியை வளைக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக அருகே சென்ற மின்கம்பியில் உரசியது.

மின்சாரம் தாக்கி பலி

இதனால் திடீரென்று மின்சாரம் தாக்கியதில் சிவமணிமுத்து தூக்கி வீசப்பட்டு உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் சிவமணி முத்துவை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த சிவமணிமுத்துவின் மனைவி துர்காதேவி மருத்துவமனைக்கு விரைந்துசென்று தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். இது குறித்து தகவல் அறிந்த பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் சிவமணி முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

2 பேர் மீது வழக்கு

அஜாக்கிரதையாக பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தொழி லாளியை பணிக்கு அமர்த்தியதாக என்ஜினீயர் சுரேஷ் (36), கட்டிட உரிமையாளர் கண்ணன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 7 மாதத்தில் மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்