வெம்பாக்கம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு
வெம்பாக்கம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.;
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாநில வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் மனிஷ்நர்னவாரே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அப்துல்லாபுரத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திலும் பங்கேற்றார்.
அப்போது செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகா, ஊரக உதவி இயக்குனர்கள் சுரேஷ்குமார், யுவராஜ், கோட்ட உதவி திட்ட அலுவலர் இமயவர்மன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மயில்வாகனம், பாஸ்கரன், தாசில்தார் சத்யன், வெம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அருள்தேவி செந்தில்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.