மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் சாவு
மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் சாவு;
தொண்டி
திருவாடானை அருகே உள்ள கோவிந்தமங்கலம் மூலவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்தன்(வயது 68). இவர் இருசக்கர வாகனத்தில் கோவிந்தமங்கலம் மேலமடை கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது உறவினர்கள் காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைதொடர்ந்து அவரது மகன் சங்கர்(38) அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த திருவாடானை போலீசார் காளிமுத்தன் உடலை கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.