தீக்குளித்து மூதாட்டி தற்கொலை
தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி டி.கேட்டாம்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் நாச்சம்மாள் (வயது 65). இவர் திடீரென்று காணாமல் போனது தெரிகிறது. இந்த நிலையில் அவரை தேடி பார்த்த போது தோட்டத்தில் உள்ள பழைய மோட்டார் அறையில் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.