சனி பிரதோஷத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
சனி பிரதோஷத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது;
சனி பிரதோஷத்தையொட்டி, போடி ஸ்ரீ கொண்டரங்கி மல்லையப்ப சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. சுவாமி கயிலை மலை சிவன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல், பிச்சாங்கரை கீழச் சொக்கநாதர் கோவில், தெற்கு ராஜ வீதி சவுடம்மன் கோவில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்களில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.