விழுப்புரத்தில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2022-11-17 18:45 GMT


விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பத்மநாபன் வரவேற்றார். பெருமாள், மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன், மாநில அமைப்பு செயலாளர் பளிங்கன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

பென்சனர் அனைவருக்கும் குறைந்தபட்ச பென்சன் மாதம் ரூ.9 ஆயிரம் பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும், பகத்சிங் கோஷியாரி கமிட்டி பரிந்துரைப்படி இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், மறுக்கப்பட்ட கம்முடேஷன் வசதிகளை திரும்ப வழங்க வேண்டும், தகுதியுள்ளவர்களுக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி உயர் பென்சன் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் ராமமூர்த்தி, வீராசாமி, மணி, புஷ்பநாதன், லட்சுமணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பஞ்சாட்சரம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்