முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.;

Update:2023-06-16 02:14 IST

முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு உறுதி மொழியினை ஏற்றனர். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் அனுராபூநடராஜமணி, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்