துவாக்குடி நகர தி.மு.க.சார்பில் பொதுக்கூட்டம்
துவாக்குடி நகர தி.மு.க.சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.;
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி துவாக்குடி நகர தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு துவாக்குடி நகர செயலாளரும். நகராட்சி தலைவருமான காயம்பு தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார். அப்போது, அவர் கூறும்போது,
முதல்-அமைச்சர் கல்வித்துறைக்கு ரூ.40 ஆயிரத்து299 கோடி ஒதுக்கி உள்ளார். அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். துவாக்குடி நகர பகுதில் குடிநீர், சாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் முக்கியமானது ஆகும். முதல்-அமைச்சர் சொன்னதையும், சொல்லாதையும் செய்துள்ளார். அண்ணா பிறந்த நாளில் பெண்களுக்கான உரிமை தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இருந்தாலும் எதிர்க்கட்சிகள் ஏதாவது குறை கண்டுபிடிக்க வேண்டும் என நினைப்பார்கள். இந்த அரசு உங்களுக்காக செயல்படுகிறது என்றார். கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
.