சிவகங்கை நகரில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் மாலை 4 மணி அளவில் மேகமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது.
தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இந்த மழையால் நகரில் நிலவிய கடும் வெப்பம் மறைந்து குளிர்ந்த காற்று வீசியது. மேலும் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடியது.