பூத்து குலுங்கும் செங்காந்தள் மலர்கள்

பூத்து குலுங்கும் செங்காந்தள் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.;

Update:2023-08-22 00:45 IST

பந்தலூர்

பந்தலூர் பகுதியில் சாலையோரங்களில் செங்காந்தள் செடிகள் உள்ளது. அந்த செடிகளில் தற்போது மலர்கள் பூத்து குலுங்குகிறது. இதனை அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் செங்காந்தள் மலர்களை கண்டு ரசித்து செல்கின்றனர். அத்துடன் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். கேரள மக்கள் ஓணம் பண்டிகைக்கு, இந்த மலர்களை அதிகளவு பயன்படுத்துவதால் ஓணப்பூ என்றும் அழைக்கின்றனர். செங்காந்தள் மலர் மருத்துவ குணம் வாய்ந்தது. பந்தலூர் பகுதியில் செங்காந்தள் மலர் உற்பத்தியை ஊக்குவிக்க தோட்டக்கலைத்துறை மானியம் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்