டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது

டிராக்டரில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-07-26 00:21 IST

இட்டமொழி:

காரியாண்டி அருகே உள்ள வெங்கட்ராயபுரம் குளத்தில் நேற்று முன்தினம் டிராக்டரில் சிலர் மணல் கடத்துவதாக வடக்கு விஜயநாராயணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகப்பெருமாள் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். டிராக்டரை பறிமுதல் செய்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட வெங்கட்ராயபுரத்தைச் சேர்ந்த பரமசிவன் (வயது 37) என்பவரை கைது செய்தனர். மேலும் டிராக்டர் உரிமையாளர் வெங்கட்ராயபுரத்தைச் சேர்ந்த சுடலை (45), வீரனாஞ்சேரியைச் சேர்ந்த இசக்கிமுத்து (25) ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்