அறிவியல் கண்காட்சி
சிவகங்கையில் உள்ள நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.;
சிவகங்கையில் உள்ள அரு. நடேசன் செட்டியார் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமை தாங்கினார். சிவகங்கை வட்டார கல்வி அலுவலர் பாலாமணி அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
கண்காட்சியில் கோளரங்கம், அமில மழையின் காரணங்கள், குளிரூட்டி, பலூன் நீரூற்று, கண் அமைப்பு, மழைநீர் சேமிப்பு, மாய எழுத்துக்கள், ஆரோக்கிய உணவு, வீட்டுத்தோட்டம், உள்ளிட்ட அறிவியல் படைப்புகள் இடம் பெற்றிருந்தன.
விழாவில் ஆசிரியர்கள் சிவ சீலா, ரேவதி, வீரசின்னம்மாள், ஆரோக்கிய மேரி, முத்துலட்சுமி, சித்ரா, பாண்டியரசி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.