வீட்டுக்குள் புகுந்த பாம்பு

வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.;

Update:2023-03-19 00:15 IST

தொண்டி, 

திருவாடானை அருகே உள்ள சி.கே.மங்கலத்தில் சரவணன் என்பவர் வீட்டில் உள்ள கழிப்பறையில் எலியை முழுங்கிய நிலையில் 4 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது.

இதுகுறித்து அறிந்த திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று நல்ல பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுயில் விட்டனர்.

இதேபோல் திருவாடானை பாரதி நகர் வேளாண்மை அலுவலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த விதை மூடைகளுக்குள் பதுங்கி இருந்த 5 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குள் விட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்