நாகபஞ்சமி சிறப்பு அபிஷேகம்

நாகபஞ்சமி சிறப்பு அபிஷேகம்;

Update:2023-08-21 17:24 IST

முத்தூர்,

முத்தூர் பஸ் நிலையம் அருகில் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சுயம்பு பாதமலையனூர் அம்மன் கோவிலில் நாக பஞ்சமி சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 10.30 மணிக்கு கோவிலில் மங்கள இசை, ஹோம பூஜையுடன் விழா தொடங்கப்பட்டு 11 மணிக்கு நாகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பக்தர்கள், நகர, சுற்றுவட்ட கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நாக சதுர்த்தி, நாக பஞ்சமி விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

-

Tags:    

மேலும் செய்திகள்