ஆவணி மாத பிறப்பையொட்டி பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு

ஆவணி மாத பிறப்பையொட்டி பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;

Update:2022-08-17 21:58 IST

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். சுபமுகூர்த்தம், மாதபிறப்பு, கார்த்திகை ஆகிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதன்படி, ஆவணி மாத பிறப்பான இன்று பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

மேலும் தமிழ் மாத பிறப்பையொட்டி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மலைக்கோவில் ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக அங்கு சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து பால், பழம், பன்னீர் என 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்