மாநில அளவிலான கராத்தே போட்டி: அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு

மாநில அளவிலான கராத்தே போட்டியில் முதல் பரிசு பெற்ற அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.;

Update:2023-10-18 23:03 IST

மதுரை திருப்பரங்குன்றத்தில் மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 15-ந்தேதி நடைபெற்றது. இப்போட்டியில் தாந்தோணி ஒன்றியம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் மோனிஷ் ராம் கலந்து கொண்டு வெற்றி பெற்று, முதல் பரிசு பெற்றார். இதனையடுத்து முதல் பரிசு பெற்ற மாணவனை, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மணிவண்ணன் புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கி பாராட்டினார். அப்போது, பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி உடனிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்