தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
ராணிப்பேட்டையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.;
கள்ளக்குறிச்சி தாசில்தார் மனோஜ் முனியன் விசாரணை இல்லாமல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் த்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாபு தலைமை தாங்கினார். தாசில்தார் மனோஜ் முனியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதற்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்தும் பேசினர். இதில் 50-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.