ஆபாச வீடியோக்களை கணவருக்கு அனுப்பியதால் இளம்பெண் தற்கொலை

தனிமையில் இருந்தபோது எடுத்த ஆபாச வீடியோக்களை கணவருக்கு அனுப்பி தொல்லை கொடுத்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கள்ளக்காதலனை அன்னூர் போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-04-22 00:15 IST


அன்னூர்

தனிமையில் இருந்தபோது எடுத்த ஆபாச வீடியோக்களை கணவருக்கு அனுப்பி தொல்லை கொடுத்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கள்ளக்காதலனை அன்னூர் போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதல்

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் பாண்டிமுருகன் (வயது 28). இவர் அன்னூர் அருகே கெம்பநாயக்கன்பாளையம் பகுதியில் தங்கி வேலை செய்து வருகிறார்.

அவருக்கு, பீகார் மாநிலத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண், ஏற்கனவே திருமணமாகி தனது கணவருடன் வசித்து வந்தார்.

Advertising
Advertising

இந்த நிலையில் பாண்டிமுருகனுக்கு அந்த பெண்ணுடன் இருந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.

அதை அந்த இளம்பெண்ணுக்கு தெரியாமல் பாண்டிமுருகன் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்தார்.

மிரட்டி பலாத்காரம்

இதற்கிடையே அந்த இளம்பெண் தனது தவறை உணர்ந்து பாண்டிமுருகனுடன் பழகுவதை தவிர்த்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டிமுருகன் தான் ரகசியமாக எடுத்த ஆபாச வீடியோவை காண்பித்து அந்த இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில், அந்த இளம்பெண் பாண்டிமுருகனுடன் பேசுவதை தவிர்த்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர், அந்த இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்த ஆபாச வீடியோவை அவருடைய கணவருக்கு அனுப்பி உள்ளார். அதை பார்த்து அந்த பெண்ணின் கணவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் கணவன்- மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது.

தற்கொலை

ஆனாலும் பாண்டிமுருகன் தொடர்ந்து அந்த இளம்பெண்ணின் கணவரின் செல்போன் எண்ணிற்கு ஆபாச வீடியோக்களை அனுப்பியதாக தெரிகிறது.

இதனால் மனவேதனை அடைந்த அந்த இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் இளம்பெண் ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டிமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்