மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை
திருநெல்வேலி நர்ப்புறம், கிராமப்புறம், கல்லிடைக்குறிச்சி கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.;
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி நர்ப்புறம், கிராமப்புறம், கல்லிடைக்குறிச்சி கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (25.11.2025, செவ்வாய்க்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பாளையங்கோட்டை மற்றும் சமாதானபுரம் துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (25.11.2025, செவ்வாய்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.
அதன்படி வி.எம்.சத்திரம், கிருஷ்ணாபுரம், கட்டபொம்மன்நகர், செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத்நகர், நீதிமன்ற பகுதி, சாந்திநகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கம் பகுதி, பாளை மார்க்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திம்மராஜபுரம், பொட்டல், படப்பக்குறிச்சி, திருமலைகொழுந்துபுரம், மணப்படைவீடு, கீழநத்தம், பாளை பேருந்து நிலையம், முருகன்குறிச்சி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரந்தானேரி, மூன்றடைப்பு, வன்னிக்கோனேந்தல், மானூர் மற்றும் மூலைக்கரைப்பட்டி துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (25.11.2025, செவ்வாய்க்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
அதன்படி மானூர், மாவடி, தெற்குபட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானார்பட்டி, பிள்ளையார்குளம், சிங்கநேரி, அம்பலம், திடியூர், மூன்றடைப்பு, பானாங்குளம்.
அம்பூரணி, தோட்டாக்குடி, பத்தினிப்பாறை, மருதகுளம்.
வன்னிக்கோனேந்தல், மூவிருந்தாளி, தேவர்குளம், முத்தம்மாள்புரம், கண்ணாடிகுளம், மருக்காலங்குளம், தெற்குபனவடலி, நரிக்குடி, மூலைகரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைசெல்வி, காடான்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
கங்கைகொண்டான் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (25.11.2025, செவ்வாய்க்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
அதன்படி சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூர், ராஜாபதி, வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, அலவந்தான் குளம், செழியநல்லூர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கல்லிடைக்குறிச்சி கோட்டம், மேலக்கல்லுர் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (25.11.2025, செவ்வாய்க்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேற்சொன்ன துணைமின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும்.
அதன்படி மேலக்கல்லுர், சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுக்கல்லுர், பழவூர், கருங்காடு, திருப்பணிகரிசல்குளம், துலுக்கர்குளம், பொழிக்கரை, வெள்ளாளங்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.