தலைமை ஆசிரியர் தர்ணா

வட்டார கல்வி அலுவலகம் முன்பு தலைமை ஆசிரியர் தர்ணாவில் ஈடுபட்டார்.;

Update:2022-06-10 23:16 IST

காரைக்குடி,

காரைக்குடி அருகே பள்ளத்தூரில் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் புஷ்பநாதன். இவருக்கு முறையான சம்பள உயர்வு மற்றும் 7-வது சம்பள குழுவின்படி நிலுவை தொகை வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தார். இந்தநிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி காரைக்குடி அருகே சாக்கோட்டையில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு தலைமை ஆசிரியர் புஷ்பநாதன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து காரைக்குடி போலீசார் அவரை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்