வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்: மதுரை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது - மு.க.ஸ்டாலின்
மேம்பாலத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, நாளை நான் திறந்து வைப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்: மதுரை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது
மதுரை - சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் மேலமடை சந்திப்பு சாலை மேம்பாலத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, நாளை நான் திறந்து வைக்கிறேன்.
இந்த முக்கிய மேம்பாலத்துக்கு, இம்மண்ணின் மக்களை ஒன்றுதிரட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரைச் சூட்டிப் பெருமையடைகிறோம்!
சீற்றமிகு சிவகங்கை அரசியின் புகழை இந்த மேம்பாலம் ஒவ்வொரு நாளும் நினைவூட்டிக் கொண்டே இருக்கும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.